இன்றைய ராசிபலன் {26 மார்ச் 2022}

0
377

மேஷம்

உங்களுக்கு சகல விதத்திலும் மேன்மையான பலன்களை பெறலாம். எடுக்கும் முயற்சியில் வளமான பலன்களை பெறலாம். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள். நண்பர்கள் மூலமாக அற்புதமான பலன்களை பெறலாம். தொழில் ரீதியாக இருந்த தயக்கங்கள் எல்லாம் நீங்கி லாபகரமான பலன்கள் பெறலாம்.

வேலையாட்கள் மூலமாக இருந்த பிரச்சினைகள் எல்லாம் விலகி சுமுகமான சூழ்நிலை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும் என்பதால் உங்களின் வேலை பல சற்று குறையும். சக ஊழியர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்பதால் கடினமான பணிகளை கூட சிறப்பாக செய்து முடிக்க கூடிய வாய்ப்பு உள்ளது.

ரிஷபம்

நேயர்கள் எதிலும் பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள் இன்று. எடுக்கும் முயற்சியில் தேவையற்ற தடை தடங்கல் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் கவனம் தேவை. நீங்கள் நல்லதாக நினைத்து செய்யக்கூடிய செயல்கள் கூட தவறாக முடிய வாய்ப்புள்ளது. பொதுவாக குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது அவசியம்.

தொழில் வியாபாரத்தில் தேவையற்ற தடங்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. வேலையாட்களை அனுசரித்துச் செல்வதால் நற்பலன் உண்டாகும். வேலைக்கு செல்பவர்கள் உங்களுடைய பணியில் கண்ணும் கருத்துமாகச் செயல்படுவது அவசியம். அதிகாரிகளுடன் பேசும் போது சற்று நிதானத்தை கடைப்பிடிப்பது அவசியம். இன்று நாள் முழுவதும் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் எந்த செயலிலும் கவனமாகவும் நிதானமாகவும் செயல்படுவது அவசியம்.

மிதுனம் 

நேயர்களே பணவரவுகள் சாதகமாக இருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது அவசியம். இருப்பதை அனுபவிப்பதற்கு கூட இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் வியாபார நிலை சாதகமாக இருந்தாலும் வேலையாட்களை சற்று அனுசரித்துச் செல்வது அவசியம்.

சில நேரங்களில் பொருளாதார நிலையில் மேற்படி ஏற்படலாம். நிதானமாக செயல்பட்டால் இருப்பதை சமாளிக்க முடியும். வேலைக்கு செல்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. பேச்சில் சற்று கவனமாக இருந்தால் அனுகூலமான பலன்களை எதிர்பார்க்கலாம் தூரத்துப் பயணங்களைத் தள்ளி வைப்பது நல்லது.

கடகம்

நேயர்களே உங்களுடைய நலமும் வளமும் கூட கூடிய நாள் இன்று. நினைத்தது நடக்கும் பணவரவு தாராளமாக இருக்கும் என்பதால் கடந்த கால நெருக்கடிகள் எல்லாம் நீங்கும். இருக்குமிடத்தில் உங்களுக்கான மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.

கடன் தொல்லைகள் எல்லாம் விலகி நிம்மதி உண்டாகும். தொழில் ரீதியாக ஒரு வளமான பலனை எதிர்பார்க்கலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருந்து சாதகமான பலனை பெறலாம்.

சிம்மம்

நேயர்களே உங்களுக்கு மிகவும் அனுகூலமான பலன்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பணவரவுகள் சாதகமாக இருக்கும் என்பதால் எதையும் எதிர்கொள்ள கூடிய சிறப்பான சூழல் இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள். பேச்சில் சற்று பொறுமையாக இருப்பது அவசியம்.

தொழில் ரீதியாக பார்க்கும்போது நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலையாட்களைச் சற்று அனுசரித்து செல்வது மிகவும் நல்லது. வேலைக்கு செல்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அதிகாரிகளை அனுசரித்துச் செல்வதும் நிதானமாக பேசுவது நல்லது. வண்டி வாகனம் வகையில் சுபச்செலவுகள் ஏற்படும் என்பதால் எதிலும் நிதானமாக இருப்பது அவசியம். பயணங்களை தள்ளிவைப்பது நல்லது.

கன்னி

நேயர்களே எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன்களை பெறலாம். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றக் கூடிய சூழலில் இருக்கும். பணவரவுகள் தாராளமாக இருக்கும் என்பதால் கடந்த கால பிரச்சனைகள் எல்லாம் நீக்கி நற்பெயர் ஏற்படும். இருக்கும் இடத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். ஒரு பெரிய மனிதர்களின் ஆதரவு கூட உங்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.தொழில் வியாபாரத்தில் சற்று பொறுமையுடன் செயல்பட்டால் அடைய வேண்டிய லாபத்தை எளிதில் அடைந்துவிடலாம். வேலைக்கு செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் சக ஊழியர்களிடம் பேசும்போது பொறுமையுடன் இருந்தால் சாதகமான பலன்களை பெறலாம். குறிப்பாக குடும்பத்தில் கணவன் மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது மிகவும் அவசியம்.

துலாம்

நேயர்களே நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றுவீர்கள். கனவுகள் எல்லாம் சிறப்பாக நிறைவேறும். பணவரவுகள் மிகச் சிறப்பாக இருக்கும். தொழில்ரீதியாக லாபகரமான பலன்களை பெறுவீர்கள். நண்பர்கள் மூலமாக ஒரு சில அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை சிறப்பாக நிறைவு நிறைவேற்றி நற்பெயரைப் பெறுவீர்கள்.

வேலைக்கு செல்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் ஏற்படும். நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். வெளியூர் மூலமாக ஒரு அனுகூலமான தகவல் கிடைக்கும். ஒரு பெரிய மனது என்னென்ன ஆதரவு கூட உங்களுக்கு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் தடைப்பட்ட சுபகாரியங்கள் நிறைவேறும் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு நிதானமாக செயல்பட்டால் வளமான பலன்களை பெறலாம்.

விருச்சிகம்

நேயர்களே நீங்கள் சற்று பொறுமையோடு செயல்பட்டால் வளமான பலன்களைப் பெறலாம். பணவரவுகள் சாதகமாக இருக்கும் உங்களுடைய தேவைகளை நிறைவேற்றக்கூடிய நாளாக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும்.

முன் கோபத்தை கட்டுப்படுத்துவது அவசியம். உடன்பிறந்தவர்கள் வகையில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துச் செல்வதால் லாபகரமான பலன்கள் ஏற்படும். வேலைக்கு செல்பவர்கள் உங்களின் பணியில் கண்ணும் கருத்துமாக இருந்தால் நல்ல வாய்ப்புகளை பெறலாம். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிக்கவும்.

தனுசு

நேயர்களே எடுக்கும் முயற்சியில் தேவையற்ற தடங்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. இருப்பதை அனுபவிப்பதற்கு கூட இடையூறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பணவரவுகள் சாதகமாக இருக்கும். அதனால் உங்களின் நெருக்கடிகள் சற்று குறையும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது அவசியம். தொழில் வியாபாரத்தில் சிறப்பான சிறப்பாக இருக்காது. எந்த ஒரு செயலையும் நீங்களே முன்னின்று செயல்பட வேண்டிய நிலை இருக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவும் சிறப்பாக இருக்கும். இருந்தாலும் சக ஊழியர்களுடன் பேசும்போது சற்று நிதானித்து பேசவும். சில நேரங்களில் மற்றவர்களின் வேலையை கூட நீங்கள் செய்ய வேண்டிய நிலையில் இருக்கும். அதனால் எதிலும் சற்று பொறுமையுடன் செயல்படுவது அவசியம். குறிப்பாக முன் கோபத்தை சற்று குறைத்துக் கொள்வது அவசியம்.

மகரம்

நேயர்களே எந்த முயற்சி எடுத்தாலும் சாதகமான பலன்களை பெறக்கூடிய நிலை இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளைச் சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள் மூலமாக ஒரு சில அனுபவங்கள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் மனநிறைவும் ஏற்படும்.

தொழில்ரீதியாக லாபகரமான பலன்களே அடையக் கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. வேலைக்கு செல்பவர்கள் நல்ல வாய்ப்புகள் தேடிவரும். அதுமட்டுமில்லாமல் நவீனகரமான பொருட்களை வாங்க கூடிய நாளாக இருக்கும். ஒரு பெரிய மனிதனின் ஆதரவு கிடைக்க கூடும். வெளியூர் மூலமாக அனுகூலமான செய்தி கிடைக்க வாய்ப்புள்ளது.

கும்பம்

நேயர்களே கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். இந்த மனம் மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் நீங்க கூடிய நாளாக இருக்கும். தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளது. உச்சத்தில் அதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும் என்பதாலும் சாதகமான பலன்களை பெறலாம். அதுமட்டுமல்லாமல் குடும்பத்தில் கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். கடந்தகால சோதனைகள் எல்லாம் நீங்கி அனுபவமான பலன்களை பெறலாம். ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனம் செலுத்தவும் உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். பயணங்களில் நிதானத்தை கடைப்பிடிக்கவும்.

மீனம்

நேயர்களே உங்களுடைய பலமும் வலிமையும் அதிகரிக்கக்கூடிய நாளாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றியது இலாபகரமான பலன்களை பெறுவீர்கள். வேலையாட்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பணவரவுகள் தாராளமாக இருக்கும் என்பதால் கடந்த கால கடன் பிரச்சனைகள் எல்லாம் நீங்கி மனநிம்மதி ஏற்படும்.

முதலீடுகள் செய்வதில் அக்கறை காட்டவும். வேலைக்கு செல்பவர்களுக்கு பண பதவி உயர்வு காட்சி இருக்கிறது உடன் இருப்பவர்கள் உடனான கருத்து வேறுபாடுகள் நீங்கி அன்பு ஏற்படும்.