அத்தியாவசிய பொருட்களை வழங்குவதை மட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள சதொச

0
286

நுகர்வோருக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்குவதை மட்டுப்படுத்துமாறு சதொச கிளைகளின் முகாமையாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் நாட்டரிசி கிலோ ஒன்று 110 ரூபாவிற்கும், இறக்குமதி செய்யப்பட்ட பொன்னி சம்பா அரிசி கிலோ 130 ரூபாவிற்கும், 5 கிலோ மாத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சீனி ஒரு கிலோ 160 ரூபாய்க்கும், பருப்பு ஒரு கிலோ 360 ரூபாய்க்கும் சதொச கிளைகளில் விற்பனை செய்யப்படுகின்றது. நுகர்வோருக்கு ஒரு கிலோ சீனி மற்றும் 500 கிராம் பருப்பு மாத்திரம் வழங்குமாறு ஆலோசனை வழங்ககப்பட்டுள்ளது.

சதொச கிளைகளில் கோதுமை மா உள்ளிட்ட பல அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதில்லை என நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.