வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ள உணவுப் பொருட்களின் விலை!

0
94

அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதால் புத்தாண்டு இனிப்பு வகைகளின் விலையை உயர்த்த வேண்டியிருக்கும் என மிட்டாய் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனி, அரிசி, பச்சைப்பயறு உள்ளிட்ட மிட்டாய்க்குத் தேவையான அனைத்துப் பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளதாலும், தேங்காய் எண்ணெய் போத்தல் ஒன்றின் விலை 900 ரூபாவைத் தாண்டியதாலும் இனிப்புப் பொருட்களுக்கு உறுதியான விலை நிர்ணயம் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எதிர்பாராதவிதமாக விறகு மூட்டையின் விலை உயர்ந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

புத்தாண்டு காலத்தில் புறநகர் பகுதிகளில் இருந்து தங்களின் மிட்டாய்களுக்கு அதிக அளவில் செய்து கொடுப்பதற்கான வாய்ப்புக்கள்  வந்தாலும், இந்த ஆண்டு அந்த வாய்ப்புக்கள்  குறையும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதனால், தங்களின் தொழில் நடத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.