மற்றுமொரு முக்கிய தளபதியை இழந்தது ரஷ்யா

0
71

உக்ரைன் போரில் மற்றுமொரு முக்கிய தளபதிகளில் ஒருவரை ரஷ்யா இழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

48 வயதான Yakov Rezantsev என்பவரே கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Yakov Rezantsev

ஆனால் ரஷ்ய தரப்பில் இந்த தகவலை உறுதி செய்யவில்லை.

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் நான்காவது நாள் தமது வீரர்களிடம் பேசிய தளபதி Yakov Rezantsev, இன்னும் சில மணி நேரத்தில் தலைநகர் கீவை கைப்பற்றுவோம் எனவும், போர் உடனே முடிவுக்கு வந்துவிடும் எனவும் தெரிவித்திருந்தார்.

இதுவரை 15 முக்கிய தளபதிகளை இழந்துள்ள ரஷ்ய படையினருக்கு இவரின் இழப்பும் பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.