மனிதாபமானமின்றி மக்கள் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்யா! ட்விட்டர் பக்கத்தில் வெளிவந்த காணொளி

0
76

உக்ரைனில் மனிதாபிமான உதவி பெற வரிசையில் காத்திருந்த மக்கள் மீது ராக்கெட் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவத்தின் வீடியோவை உக்ரைனின் குடிமை உரிமைகளுக்கான மையத்தின் தலைவர் Oleksandra Matviichuk தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கார்கிவ் குடியிருப்பாளர்கள் மனிதாபிமான உதவியைப் பெற்றுக் கொண்டிருந்த கார்கிவில் உள்ள நோவா போஷ்டா அஞ்சல் துறை அலுவலகம் மீது ரஷ்யர்கள் தாக்குதல் நடத்தினர்.

வரிசையில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது ராக்கெட் தாக்கியது என வீடியோவுடன் Oleksandra Matviichuk பதிவிட்டுள்ளார்.

குறித்த வீடியோவில், உதவி பெற மக்கள் வரிசையாக நின்று கொண்டிருக்கும் போது, ராக்கெட் ஒன்று தாக்குகிறது.

இதனையடுத்து, மக்கள் அனைவரும் தெறித்து ஓடும் காட்சியை வீடியோ காட்டுகிறது.