பேருந்தில் மது அருந்திய பள்ளி மாணவர்கள் !

0
68

தமிழக மாவட்டம் செங்கல்பட்டில் ஓடும் பேருந்தில் பள்ளி மாணவர்கள் சிலர் பேருந்தில் மது  அருந்தும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாகி வருகிறது.

செங்கல்பட்டில் திருக்கழுக்குன்றத்திலிருந்து தச்சூருக்கு செல்லும் வழியில் பேருந்து ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை எடுக்கப்பட்ட வீடியோ என்பது காவல்துறையினர் தெரிவிக்கும் தகவலாக இருக்கிறது.

இந்த வழியில் பேருந்து சென்று கொண்டிருக்க, கும்பலாக சில மாணவர்கள் – மாணவிகள் என இரு பாலினரும் பேருந்துக்குள் வைத்து மது பாட்டில்களை திறந்து, குடிக்க ஆரம்பித்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்ட கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலா, இந்த சம்பவத்தை உறுதிபடுத்தியுள்ளனர்.

இதன் தொடர்பில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணை நிறைவுபெற்ற பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தமிழகத்தில் சிறார் குற்றங்களும், சிறார் ஒழுங்கீன நடவடிக்கைகளும் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அவற்றை தடுக்க அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென குழந்தை நல ஆர்வலர்கள் கோரிக்கைகள் வைத்துவருகின்றனர்.