பதுளையில் முச்சக்கரவண்டியொன்று விபத்து! பாடசாலை மாணவரொருவர் பலி

0
59

பதுளை மாவட்டத்தின் அம்பகஸ்தோவ பொலிஸ் பிரிவில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டியொன்று விபத்திற்கு இலக்காகியுள்ளது.

குறித்த விபத்து நேற்று காலை 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் மாணவரொருவர் உயிரிழந்துள்ளதுடன், பாடசாலை மாணவர்கள் மூவர் மற்றும் முச்சக்கரவண்டி சாரதி ஆகியோர் ஊவா பரணகம பிராந்திய வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொடலிந்த பிரதேசத்தில் வீதியில் குவிக்கப்பட்டிருந்த மண் மேட்டில் முச்சக்கரவண்டி மோதியதால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.