நாளைய தினம் மின்வெட்டு தொடர்பாக வெளியான தகவல்!

0
88

நாட்டில் நாளைய தினம் (27) மின்வெட்டை மேற்கொள்வதற்கு இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி A, B, C, D, E, F, G, H, I, J, K, L ஆகிய வலயங்களுக்கு காலை 8.30 மணி தொடக்கம் மாலை 5.30 மணி வரையான காலப்பகுதியில் 02 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.

மாலை 5.30 மணி தொடக்கம் இரவு 10.30 மணி வரை ஒரு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

அதேபோன்று P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களிற்குட்பட்ட பகுதிகளில் மாலை 05 மணி தொடக்கம் இரவு 11 மணி வரையான காலப்பகுதியில் 02 மணித்தியாலங்கள் மட்டுமே மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.