தென்னிந்தியாவில் ஏன் இவ்வளவு மோசமாக படம் எடுக்கிறார்கள் – RRR படம் குறித்து கமல் மோசமான டுவிட்

0
141

இந்திய சினிமா கொண்டாடும் அளவிற்கு நேற்று (மார்ச் 25) பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் RRR. எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்க ராம் சரண்-ஜுனியர் என்.டி.ஆர் முதன்முதலாக இணைந்து நடித்திருக்கும் ஒரு படம்.

வெற்றிநடைபோடும் திரைப்படம்

படத்தை காண ரசிகர்கள் பல வருடங்களாக காத்துக் கொண்டிருக்க இப்போது பெரிய அளவில் படத்திற்கு வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள். படம் முதல் நாள் முடிவிலேயே ரூ. 200 கோடி உலகம் முழுவதும் வசூல் செய்ய வெற்றியை நோக்கி படம் சென்றுகொண்டிருக்கிறது.

எஸ்.எஸ்.ராஜமௌலியின் கதை, பிரம்மாண்டம், இரண்டு முக்கிய நடிகர்கள் என படத்தில் கொண்டாட நிறைய விஷயங்கள் இருக்கின்றன. 

RRR படம் குறித்து கமல்

பாலிவுட் படங்கள் எது வந்தாலும் பாதி மோசமான விமர்சனங்கள் கொடுப்பவர் கமல் கான். இவர் RRR படம் பார்த்துவிட்டு என்.டி.ஆர் ராம் சரணை தூக்கி வைத்துக்கொள்ள அவர் துப்பாக்கி வைத்திருக்கும் 1000 நபர்களுடன் சண்டை போடுகிறார்.

இவ்வளவு முட்டாள் தனமான காட்சிகளை தென்னிந்திய ரசிகர்களால் மட்டுமே ரசிக்க முடியும் என டுவிட் போட்டுள்ளார்.