சீரியல் நடிகர் நவீனுடனான காதல் குறித்து முதன்முறையாக மேடையில் பேசிய கண்மணி

0
104

கடந்த வருட இறுதியில் தொடர்ந்து சீரியல் பிரபலங்களின் திருமணம் நடந்தது. முதலில் ஆர்யன்-ஷபானா, மதன்-ரேஷ்மா. சித்து-ஸ்ரேயா என தொடர்ந்து சின்னத்திரை கலைஞர்களின் திருமணங்கள் நடந்தது.

சர்ச்சையில் ஷபானா-ஆர்யன் திருமணம்

இவர்களின் ஆர்யன்-ஷபானா திருமணம் மட்டும் கொஞ்சம் சர்ச்சையாக பேசப்பட்டது. ஷபானா தனது வீட்டில் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்துகொண்டார். தற்போது வீட்டில் பெரிய பிரச்சனை காரணமாக ஆர்யனை பிரிகிறார் என்றெல்லாம் பேசப்பட்டது.

ஆனால் ஷபானா-ஆர்யன் இருவரும் சில புகைப்படங்கள் மூலம் அதெல்லாம் பொய் என்று நிரூபித்தார்கள்.

அவர்களை தொடர்ந்து இப்போது சின்னத்திரையில் ஒரு பிரபலத்தின் திருமணம் நடக்க இருக்கிறது.

நவீன் மற்றும் கண்மணி

கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் இதயத்தை திருடாதே சீரியல் நாயகன் நவீன் மற்றும் சன் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் கண்மணி இருவரும் திருமணம் செய்துகொள்வதாக செய்தி வெளியிட்டுவிட்டார்கள்.