சவுதி அரேபியாவில் அதிகரித்து வரும் விவாகரத்து!

0
49

சவுதி அரேபியாவில் விவாகரத்து வழக்குகள் அதிகரித்து வருதாகவும் ஒரு மணிநேரத்திற்கு 7 வழக்குகள் பதிவாகி வருதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், சவுதி அரேபியாவில் பெண் ஒருவர் தனது கணவரிடம் விவாகரத்து கேட்டு உள்ளார். இல்லையென்றால், வெளியே ஆடையின்றி ஊர்வலம் செல்வேன் என்று அதிரடியாக மிரட்டி உள்ளார்.

வேறு வழி இல்லாத நிலையில், கணவன் ஷரியா நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்த விவாகரத்து முடிவு தனது விருப்பத்திற்கு எதிரானது என்றும் அதனால் அதனை ரத்து செய்யும்படியும் கேட்டு கொண்டார்.

இருப்பினும், அவரது வழக்கை எடுத்து கொள்ள நீதிமன்றம் மறுத்து விட்டது. ஷரியா சட்டத்தின்படி விவாகரத்திற்கான காரணம் அமைந்து விட்டது என அவரிடம் தெரிவித்து அதனை உறுதிப்படுத்தி உள்ளது.

சவுதி அரேபியாவில் விவாகரத்து வழக்கு அதிகரித்து விட்டன. ஒவ்வொரு மணிநேரத்திற்கு 7 வழக்குகள் பதிவாகின்றன என அந்நாட்டு புள்ளியியலுக்கான பொது அமைப்பு தெரிவித்துள்ளது.

சவுதியில் கடந்த 10 ஆண்டுகளில் 60 சதவீதம் அளவுக்கு திகைக்க வைக்கும் வகையில் விவாகரத்து வழக்குகள் அதிகரித்து விட்டன என்றும் தெரிவித்துள்ளது.