கிளிநொச்சியில் குடிநீர் தட்டுப்பாடு

0
69

கிளிநொச்சி  – பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாச்சிகுடா ஜெயம்ஸ் புரம் கிராமத்தில் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் அன்றாடம் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக இப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பல பகுதிகளில் குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

இந்த நிலையில் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு பிரதேச சபையின் ஊடாக குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

நொச்சிக்குடா பகுதியில் உள்ள ஜேம்ஸ் நகர் பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமக்கான குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

குறிப்பாக பிரதேச சபையினால் குறித்த பகுதிக்கு குடிநீர் வினியோகம் மேற்கொள்ளப்படுகின்ற போதும் போதியதாக இல்லை என்றும் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்வாறு குடிநீர் போதாமையினால் தாங்கள் பல்வேறு இடங்களுக்கும் சென்று நெருக்கடிகளுக்கு மத்தியில் குடிநீரை பெற்றுக்கொள்ள வேண்டிய சூழ்நிலை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.