கடற்றொழிலை நம்பி வாழ்ந்த பெண்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

0
87

கிளிநொச்சி  – பூநகரி பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் அட்டை வளர்ப்பு தொழில் காரணமாக கடற்றொழிலை நம்பி வாழ்ந்த பெண்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டிருப்பதுடன், பண்ணைகளுக்கான அட்டைக் குஞ்சுகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாகவும் பூநகரி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் தலைவர் பிரான்சிஸ் ஜோசப் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேசத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அட்டை தொழில் வழிமுறைகளால் பலரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதாக கடற்றொழிலாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றது.

அத்துடன் பெரும் முதலீடுகளைச் செய்து அட்டை பண்ணைகளை அமைத்துள்ள போதும் அவற்றிற்கு தேவையான அட்டை குஞ்சுகளை பெற்றுக் கொள்வதில் தொடர்ந்தும் சிரமங்கள் காணப்படுவதாகவும், வெளியிடங்களில் இருந்து கொண்டு வரப்படுகின்ற அட்டை குஞ்சுகள் இந்த சூழலுக்கு ஏற்றதாக இல்லையென்றும் அவை அழிவடைந்து விடுகின்றன என்றும் கடற்றொழிலாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.