எதற்கும் துணிந்தவன் வசூலை உறுதி செய்த அப்படத்தின் நடிகர் ! எத்தனை கோடி தெரியுமா?

0
103

வரவேற்பை பெற்ற ET  

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த 10 ஆம் தேதி வெளியாகி திரையரங்கில் வெற்றிகரணமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன்.

பக்கா கமர்சியல் திரைப்படமான எதற்கும் துணிந்தவன் குடும்ப பார்வையாளர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இரண்டு வருடங்களுக்கு பிறகு சூர்யாவின் திரைப்படம் திரையரங்கில் வெளியாகியிருக்கும் நிலையில் ரசிகர்கள் அனைவரும் இப்படத்தை திரையரங்கில் கொண்டாடினர். 

படத்தின் வசூல் 

எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகி இத்தனை நாட்கள் ஆகியுள்ள நிலையில் அப்படத்தில் வில்லனாக நடித்த வினய் ராய் படத்தின் வசூல் குறித்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதன்படி எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ரூ.175 கோடிகள் வசூல் செய்துள்ளதாக போஸ்டர் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.  

ஆனால் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் விசாரித்தால் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் உலகளவில் ரூ.80 கோடிக்கும் மேல் தான் வசூலித்து இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே அப்பட நடிகர் போட்டுள்ள பதிவு எந்தளவிற்கு உண்மையென தெரியவில்லை, நமக்கு கிடைத்த தகவலின் படி ET படத்தின் காலெக்ஷன் இவ்வளவு தான்.