உலகின் மிகவும் உயரமான கட்டடத்தில் திரையிடப்பட்ட ‘தமிழ்’

0
98

உலகின் மிகவும் உயரமான கட்டடத்தில் செம்மொழியான தமிழ் திரையிடப்பட்டது தமிழ்மக்களை நெகிழ வைத்துள்ளது.

டுபாயில் சர்வதேச தொழில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் இந்தியா உள்பட 192 நாடுகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு நாடுகள் சார்பில் அந்த வளாகத்தில் தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, டுபாய் கண்காட்சியில், ‘தமிழ்நாடு அரங்கு’ அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

தமிழ்நாடு வார விழாவை ஒட்டி டுபாயில் உள்ள 2 ஆயிரத்து 217 அடி உயரமுள்ள புர்ஜ் காலிபா கோபுரம் மீது தமிழ், தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, செம்மொழி, தமிழக அகழ்வாராய்ச்சிகள் குறித்த ஆவண காட்சிகள் திரையிடப்பட்டது.

மேலும், அந்த திரையில் செம்மொழியான தமிழ் மொழியாம் பாடலும் ஒளிபரப்பப்பட்டது.