அவுஸ்திரேலிய – இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான T-20 போட்டிகள் ஜுன் மாதம் கொழும்பில்

0
79

அவுஸ்திரேலிய அணி – இலங்கைக்கு எதிர்வரும் ஜுன் மாதம் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

ஆறு வருடங்களின் பின்னர் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி – இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த கிரிக்கெட் சுற்றுப்பயணத்தில் இரு அணிகளும் 2 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 3 ரி-ருவன்ரி போட்டிகளில் விளையாடவுள்ளன.

ரி-ருவன்ரி போட்டிகள் ஜுன் மாதம் 7ம், 8ம், 11ம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ளன. ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் ஜுன் மாதம் 14ம், 16ம் திகதிகளில் கண்டியிலும், 19ம், 21ம், 24ம் திகதிகளில் கொழும்பிலும் நடைபெறவுள்ளன.

முதலாவது டெஸ்ட் போட்டி ஜுன் மாதம் 29ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இரண்டாவது போட்டி ஜுலை மாதம் 8ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.