அந்நியச் செலாவணி நெருக்கடிக்கு தீர்வாக இலங்கை அரசு முன்வைத்துள்ள திட்டம்!

0
69

இலங்கையில் அந்நியச் செலாவணி நெருக்கடிக்கு தீர் கஞ்சாவை வளர்த்து ஏற்றுமதி செய்வது குறித்தும் சர்வகட்சி மாநாட்டில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதற்கு அனைத்து கட்சி பிரதிநிதிகளும் ஒப்புதல் அளித்துள்ளனர்.

அமைச்சர் பந்துல குணவர்தன, நாடாளுமன்ற உறுப்பினர்களான டயானா கமகே, எம்.ஏ. சுமந்திரன் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளனர்.

ஏற்றுமதிக்காக கஞ்சாவை பயிரிடுவதற்கு அல்லது வளர்பதற்கு தடை செய்யும் வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்வதற்கான யோசனை சட்ட மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கஞ்சா விஷ போதைப்பொருள் அல்ல என சட்டமா அதிபர் அறிவுறுத்தியதையடுத்து, அது நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட உள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே, கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குமாறு தனிப்பட்ட உறுப்பினர் பிரேரணையை சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.