வாடிக்கையாளர்களுக்கு மட்டுப்படுத்தி வழங்கப்படும் அத்தியவசிய பொருட்கள்!

0
56

பல அத்தியவசிய பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு மட்டுப்படுத்தி வழங்குமாறு சதோச கிளைகளின் முகாமையாளர்களுக்கு சுற்றறிக்கை மூலம் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இறக்குமதி செய்த ஒரு கிலோ கிராம் நாட்டு அரிசியை 110 ரூபா மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் பொன்னி சம்பா அரிசியை 130 ரூபா என்ற விலையில் வாடிக்கையாளர்களுக்கு தலா 5 கிலோ கிராம் அரிசியை மாத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ சீனி 160 ரூபாவுக்கும் ஒரு கிலோ பருப்பு 360 ரூபாவுக்கும் சதோச கிளைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், வாடிக்கையாளர்களுக்கு ஒரு கிலோ சீனி மற்றும் 500 கிராம் மைசூர் பருப்பை வழங்குமாறு கிளை முகாமையாளர்களுக்கு சதோச நிர்வாகம் ஆலோசனை வழங்கியுள்ளது.

சதோச கிளைகளில் கோதுமை மா உட்பட பல அத்தியவசிய பொருட்கள் விற்பனைக்கு இல்லை என நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.