ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக ஜனநாயக நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ள கனேடிய பிரதமர் !

0
63

உக்ரைன் மீதான ரஷ்ய போர் கடந்த 29 நாளாக நீடித்து வரும் நிலையில், வான்வெளி, தரைவழி தாக்குதல் மட்டுமின்றி கடல் வழியாகவும் கடுமையான தாக்குதல் நடத்தி வருகின்றது.

இதன்போது ரஷ்ய படைகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் உக்ரைன் வீரர்களும் எதிர்த்து போராடி வருகின்றனர்.

இந்நிலையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக ஜனநாயக நாடுகள் ஒன்றிணையுமாறு ஐரோப்பிய தலைவர்களுக்கு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக மாறிவரும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தொடர்பிலும் உரிய முடிவெடுக்க வேண்டும் எனவும்,ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது முக்கிய கோரிக்கையொன்றினையும் முன்வைத்துள்ளார்.

மேலும்,மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு இராணுவ உபகரணங்களையும் போருக்கு தேவையான உதவிகளையும் அனுப்ப வேண்டும் எனவும், ரஷ்யா மற்றும் பெலாரஸில் உள்ள புடின் மற்றும் அவருக்கு உதவுபவர்கள் மீதான பொருளாதார தடைகளை மேலும் இறுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.