மன்னிப்பு கோர தயார்: ரஞ்சன் ராமநாயக்க

0
76

சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான இரண்டாவது வழக்கு சம்பந்தமாக மன்னிப்பு கோர தயார் என இன்று உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று காலை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டதுடன் இதன் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. நீதியரசர்கள் புவனேக அலுவிகார, காமினி அமரசேகர, எல்.ரி.பி. தெல்தெனிய ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

நீதிமன்ற வளாகத்தில் நீதிமன்றத்தை அவமதித்தமை சம்பந்தமாக ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 

ஏற்கனவே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றில் நான்கரை ஆண்டுகள் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக உயர் நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ளதுடன் அவர் அந்த தண்டனை அனுபவித்து வருகிறார்.