மத்துகம நகர் பகுதியில் தீப்பந்தங்களை ஏந்தியவாறு போராட்டம்!

0
59

மத்துகம நகர் பகுதியில் தீப்பந்தங்களை ஏந்தியவாறு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் அதிகரித்துள்ள வாழ்க்கை செலவுக்கு இதன்போது எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட அதேவேளை இதற்காக சரியான நடவடிக்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படாமைக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த போராட்டம் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்துகம தொகுதி அமைப்பாளர் ஶ்ரீபால் வன்னிஆராய்ச்சியின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் பெருந்தோட்ட தமிழ் மக்கள் உட்பட பாதிக்கப்பட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும், அரசாங்கத்தின் பங்காளி கட்சியான ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிராக நடத்திய முதலாவது போராட்டம் இது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது