நாட்டில் பல்வேறு வரிசையில் நிற்கும் மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை!

0
59

வரிசையில் நிற்கும் மக்களுக்கு தன்சல் போன்று தண்ணீர் தானம் செய்ய வேண்டும் என பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார். பிபிசி உலக சேவையின் கேள்விக்கு பதிலளித்த பேராசிரியர் இதனை கூறியுள்ளார்.

“கடுமையான வெயில் காரணமாக ஏற்படும் நீரிழப்பு மரணத்திற்கு கூட வழிவகுக்கும் என பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மிகப் பெரிய பிரச்சனை தண்ணீர். வெயிலில் நிற்கும் போது தலையை மறைத்துக் கொள்வதற்கு நிழல்கள் எதுவும் இல்லை. இதனால் உடலில் நீரழப்பு ஏற்படும்.

வரிசையில் நிற்போர் ஒரு போத்தல் தண்ணீர் எடுத்துச் செல்ல வேண்டும். தன்சல் போன்ற குடிநீர் வழங்கும் முறையை அமுல்படுத்த வேண்டும்.

வாகனங்களில் இருந்தால் கூட இந்த பிரச்சினை ஏற்படும். என்ஜினை அனைத்து விட்டு ஏசி போடவில்லை என்றால் இந்த நிலைமை ஏற்படும்.

நீரிழப்பைத் தடுக்க தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது முக்கிய ஆலோசனையாகும். ஒரு போத்தல் தண்ணீரை எடுத்துக்கொண்டு செல்லுங்கள். முடிந்தளவு தண்ணீர் குடிக்க வேண்டும். வேறு எந்த நோயும் இல்லாத ஆரோக்கியமான இளைஞனுக்கும் நீரிழப்பு ஏற்படுவது நல்லதல்ல. முடிந்த அளவு தண்ணீர் குடிக்கவும்.

சிலர் கழிவறைக்கு செல்ல வேண்டும் என்பதால் தண்ணீர் குடிப்பதில்லை. முகக் கவசத்தை அகற்ற வேண்டியிருக்கும் என்பதால் தண்ணீர் குடிப்பதில்லை. எனினும் அது மிகவும் ஆபத்தானது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் பல்வேறு வரிசையில் நிற்கும் போது மக்கள் தண்ணீர் போத்தல் ஒன்றை எடுத்துச் செல்லுமாறு இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் பேராசிரியர் சமன் தர்மரத்ன பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.