தளபதி விஜய்யின் லேட்டஸ்ட் அன்ஸீன் கிளிக் !

0
90

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள திரைப்படம் பீஸ்ட்.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் 13 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைவரும் எதிர்பார்த்து வரும் அப்படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.  

இப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் இயக்குனர் வம்சி இயக்கத்தில் தமிழ் – தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் தளபதி 66 படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் தளபதி விஜய்யின் ரீ-சென்ட் லுக்கில் பல நபர்களை சந்தித்துள்ள புகைப்படங்கள் வெளியாகின. புதுச்சேரி முதலமைச்சர், தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள் இயக்கத்தினர் உள்ளிட்டோரை சந்தித்த போது எடுக்க விஜய்யின் புகைப்படங்கள் வைரலாகின.

அந்த வகையில் தற்போது அதே லுக்கில் தளபதி விஜய் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.