சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்கும் ரவீந்திர ஜடேஜா!

0
93

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்கும் ரவீந்திர ஜடேஜாவுக்கு சுரேஷ் ரெய்னா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 15வது சீசன் நாளை மறுநாள் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகவுள்ளார், அவருக்கு பதிலாக கேப்டன் பொறுப்பை ரவீந்திர ஜடேஜா ஏற்கவுள்ளார்.

இது குறித்து சுரேஷ் ரெய்னா டுவிட்டர் பதிவில், என் சகோதரனுக்கு (ஜடேஜா) முற்றிலும் மகிழ்ச்சி. நாங்கள் இருவரும் வளர்ந்து வந்த ஒரு அணியின் கட்டுப்பாட்டை கையில் எடுப்பதற்கு அவரை விட சிறந்தவராக வேறு யாரையும் நினைக்கவில்லை.

உங்களுக்கு நல்வாழ்த்துக்கள். இது ஒரு உற்சாகமான கட்டம், எல்லா எதிர்பார்ப்புகளுக்கும் அன்பிற்கும் ஏற்ப நீங்கள் செயல்படுவீர்கள் என்று நான் நம்புகிறேன் என கூறியுள்ளார்.

ரெய்னா தனது பதிவில் தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகியது தொடர்பில் எதுவுமே தெரிவிக்கவில்லை.

சமீபத்தில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் சிஸ்கே அணியால் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்ட சுரேஷ் ரெய்னாவை எந்தவொரு அணியுமே ஐபிஎல் ஏலத்தில் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.