எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்கொள்வதற்கு நின்ற வரிசையில் ஏற்பட்ட மோதல்!

0
85

கண்டியில் எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்கொள்வதற்கு மக்கள் நின்ற வரிசையில் ஏற்பட்ட மோதலில் காவல்துறை உத்தியோகத்தர் மற்றும் பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.

நேரில் கண்ட சாட்சிகளின்படி, பொதுமக்களைத் தாக்க மரக் கம்பங்கள் பயன்படுத்தப்பட்டன, இதன் போது காவல்துறை அதிகாரியும் காயமடைந்தார்.

கண்டியில் உள்ள லிட்ரோ எரிவாயு விநியோக நிலையத்தின் வாயிலுக்கு அருகில் பொதுமக்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

காஸ் சிலிண்டர்களை பெறுவதற்காக நேற்று இரவு முதலே ஏராளமானோர் வரிசையில் நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.