எரிபொருளுக்கான ‘வரிசைகள்’ குறைவு

0
98

நாட்டிற்கு எரிபொருள் கப்பல்கள் வந்துள்ள போதிலும், நேற்றிரவும் சில பகுதிகளில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்காக பொது மக்கள் வரிசைகளில் காணப்பட்டனர்.

எவ்வாறாயினும், கடந்த நாட்களை விட தற்போது எரிபொருளுக்கான இந்த வரிசைகள் வெகுவாகக் குறைவடைந்துள்ளன

இந்திய கடனுதவியுடன் டீசலை ஏற்றிய  மேலுமொரு கப்பல் நேற்று இலங்கையை வந்தடைந்ததையடுத்து, நாடுபூராகவும் எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனூடாக எரிபொருளுக்காக பொதுமக்கள் வரிசையில் காத்திருக்கும் நிலை விரைவில் முடிவுக்கு வரும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், எரிவாயுகளை ஏற்றி வந்த கப்பல்களும் நாட்டை வந்தடைந்துள்ளன.