உக்ரைனிடம் சுற்றி வளைக்கப்படும் அபாயத்துக்குள்ளாகியுள்ள ரஷ்யப் படைகள்!

0
61

உக்ரைனை ஊடுருவ வந்த ரஷ்யப் படைகள், இப்போது தாங்களே சுற்றி வளைக்கப்படும் அபாயத்துக்குள்ளாகியுள்ளதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் தலைநகர் Kyivக்கு மேற்கே உள்ள Makariv மற்றும் Moschun என்னும் இரு நகரங்களை உக்ரைன் படைகள் ரஷ்யப்படைகளிடமிருந்து மீட்டிருக்கலாம் என ஒரு தகவல் வெளியாகியுள்ளதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அப்படி அந்த நகரங்கள் உக்ரைன் வீரர்களால் மீட்கப்பட்டிருக்குமானால், ஏற்கனவே Bucha மற்றும் Irpin நகரங்களுக்குள் ஊடுருவி, அங்கு முகாமிட்டிருக்கும் ரஷ்யப் படைகள், உக்ரைன் படைகளால் சுற்றி வளைக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு