இருப்பதில் இது தான் மிகவும் கடினமானது ! – ஐஸ்வர்யா ரஜினிகாந்

0
99

தமிழ் சினிமாவின் முக்கிய தம்பதிலாக இருந்து வந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா 18 வருட திருமண வாழ்க்கைக்கு பின் பிரிவதாக அறிவித்து இருந்தனர்.

அவர்களின் பிரிவுக்கு பிறகு இருவரும் தங்களின் வேளைகளில் பிஸியாகி விட்டனர். அதன்படி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆல்பம் சாங் ஒன்றை இயக்கி வந்தார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் அப்பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.  

இதனிடையே இப்போதெல்லாம் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவ்வப்போது ஏதாவதை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது “ஜூம் கால், தங்கையுடன் உரையாடல், திரைக்கதை வேலை, பிள்ளைகளின் ப்ரெண்ட் டீச்சர் மீட்டிங்கில் கலந்து கொள்வது மிகவும் கடினமானது, காபி இல்லாமல் ஒரு நாளும் தொடங்குவதில்லை, என் மோசமான கூந்தலை தவிர இந்த வாரம் எனக்கு மிகவும் அழகாக சென்றது” என பதிவிட்டுள்ளார்.