ரஷ்யாவிற்கு எதிராக உலகளாவிய போராட்டத்தை முன்னெடுக்க அழைப்பு!

0
294

ரஷ்யாவிற்கு எதிராக உலகளாவிய போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உலக மக்களை வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் உக்ரைன் சின்னங்களுடன் நாட்டின் முக்கிய இடங்களிலும், தெருக்களிலும் உக்ரைனுக்காக போராட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தடை செய்யப்பட்ட பொஸ்பரஸ் குண்டுகளை ரஷ்யா வீசியதாக, உக்ரைனின் லுஹான்ஸ்க் மாகாண கவர்னர் குற்றம் சாட்டிய நிலையில், அதில் 4 பேர் உயிரிழந்ததாகவும், வீடுகள் சேதமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், உக்ரைன் மீது போர் தொடுத்து புடின் மிகப்பெரிய தவறை ஏற்படுத்திவிட்டார் என நேட்டோ தலைவர் குற்றம்சாட்டியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா பயன்படுத்தும் ரசாயன ஆயுதங்கள் நேட்டோ பிராந்தியத்தை மாசுப்படுத்தும் என நேட்டோவின் பொது செயலாளர் எச்சரித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.