ரஷ்யாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ள நேட்டோ அமைப்பு !

0
313

உக்ரைனில் ரஷ்ய படையினர் போர்க் குற்றம் இழைத்துள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டி உள்ள நிலையில், ரஷ்யாவை எதிர்த்து போரிட ஆயுதங்கள் வேண்டும் என்று நேட்டோ அமைப்பு நாடுகளுக்கு உக்ரைன் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், பாதுகாப்பு உதவி மற்றும் உபகரணங்கள் உதவி உட்பட உக்ரைனுக்கு கூடுதல் ஆதரவு வழங்கப்படும் என நேட்டோ அமைப்பு உறுதியளித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி உக்ரைனில் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று ரஷ்யாவை நேட்டோ அமைப்பு எச்சரித்துள்ளது.

உக்ரைனில் கடந்த மாதம் 24 ஆம் திகதி ஆரம்பித்த யுத்தம் நான்காவது வாரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில்,  7,000 முதல் 15,000 வரை ரஷ்ய படையினர் கொல்லப்பட்டுள்ளதாக நேட்டோ அமைப்பு மதிப்பிட்டுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.