இழப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் தனது தளபதி மீதே டாங்கியை ஏற்றிய ரஷ்ய வீரர் !

0
501

உக்ரைனில் தனது டாங்கி படைப்பிரிவு பாரிய இழப்பை சந்தித்ததை தாங்கிக்கொள்ள முடியாத ரஷ்ய வீரர் ஒருவர் தனது தளபதி மீதே டாங்கியை ஏற்றிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக உக்ரைனிய ஊடகவியலாளர் Roman Tsymbaliuk தெரிவித்துள்ளார்.

அவரது டாங்கி படைப்பிரிவில் 1500 படையினர் இருந்துள்ளனர்.நடைபெற்று வரும் போரில் அந்த படையணி சிதைக்கப்பட்டுள்ளது. இதில் அரைவாசிப்பேர் உயிரிழந்து விட்டனர் அல்லது காயமடைந்து விட்டனர். இதனால் ஆத்திரமடைந்த குறித்த படைவீரர் தனது படைத்தளபதியான கேணல் Yuri Medvedev என்பவர் மீது டாங்கியை ஏற்றியுள்ளார்.

இதனால் அவர் இரண்டு கால்களிலும் படுகாயமடைந்த நிலையில் பெலாரஸ் நாட்டிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார்.

எனினும் இந்த செய்தியில் எந்த அளவுக்கு உண்மைத்தன்மை உள்ளது என்பது தெரியவில்லை. ஆனால், அதற்கு ஆதாரமாக, கால்களில் பலத்த காயமடைந்த கேணல் Medvedev, ஸ்ட்ரெச்சர் ஒன்றில் வைக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

எனினும் செச்சென் தலைவர் ரம்ஜான் கதிரோவ் வெளியிட்ட ஒரு வீடியோவில், விளாடிமிர் புடினின் நெருங்கிய கூட்டாளி – Medvedev மருத்துவமனை சிகிச்சைக்காக பெலாரஸுக்கு துருப்புக்களால் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

ஒரு செச்சென் போராளி – ரஷ்ய தேசிய படை மற்றும் நேரடியாக புடினின் கட்டுப்பாட்டின் கீழ் சண்டையிடுபவர் காயமடைந்த Medvedev விடம் கேட்கிறார்,’பொறு… எப்படி இருக்கிறாய்? சரி? எங்களுடன் பேசுங்கள்… Medvedev பதிலளித்தார்: ‘நான் நன்றாக இருக்கிறேன். நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?’ இவ்வாறு அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.