இலங்கை மீது குற்றம் சாட்டியுள்ள தமிழகக் கடற்தொழிலாளர்கள்!

0
533

இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டு வர பல ஆயிரம் கோடி ரூபாவை நிதி உதவியாக இந்திய அரசிடம் பெற்றுக் கொண்ட இலங்கை அரசு, அதற்கு கைமாறாக தமிழக கடற்தொழிலாளர்கள் 16 பேரை சிறைபிடித்துள்ளதாக ராமேஸ்வரம் கடற்தொழிலாளர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

இலங்கை கடற்படையின் இந்த கைது நடவடிக்கையை கண்டித்து நாளை (25) முதல் ராமேஸ்வரம் கடற்தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக ராமேஸ்வரம் கடற்தொழிலாளர்கள் இன்று  (24) காலை இராமேஸ்வரத்தில் நடத்திய அவசர ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் கடற்தொழில் துறை முகங்களில் இருந்து அரசு கடற்தொழில் அனுமதி சீட்டு பெற்று நேற்று காலை கடற்தொழிலுக்கு கடலுக்குள் சென்ற ராமேஸ்வரத்தை சேர்ந்த 12 கடற்தொழிலாளர்களையும், மண்டபத்தைச் சேர்ந்த 4 கடற்தொழிலாளர்கள் என மொத்தமாக 16 கடற்தொழிலாளர்கள் எல்லை தாண்டி கடற்தொழிலில் ஈடுபட்டதாக இலங்கை கடற்படையினர் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.