இலங்கை கடற்பரப்பிற்குள் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள்!

0
297

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 இந்திய மீனவர்கள் இரண்டு பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு அருகே இன்று இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் ஒரு படகையும் அதிலிருந்த 04 மீனவர்களையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை மயிலிட்டி துறைமுகம் அழைத்து வந்து கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறைத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இரணைத்தீவு அருகே அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் முழங்காவில் கடற்படை முகாமிற்கு அழைத்து வந்து கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.