இந்தியாவின் கடனுதவியை பயன்படுத்த இந்திய விநியோகஸ்தர்கள் விரும்பவில்லை!

0
305

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டு, துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்திவசிய பொருட்கள் அடங்கிய ஆயிரத்து 500 கொள்கலன் பெட்டிகளை விடுவிக்க கடனுவி பயன்படுத்த சில விரும்பவில்லை என தெரியவருகிறது.

தமது பொருட்களுக்கான பணத்தை இந்திய ரூபாவில் செலுத்தாது, அமெரிக்க டொலர்களிலேயே செலுத்த வேண்டும் என இந்திய விநியோகஸ்தர்கள் கூறியுள்ளனர்.

இந்தியாவில் இருந்து அத்தியவசிய பொருட்கள், மருந்து ஆகியவற்றை இறக்குமதி செய்ய இலங்கை அரசாங்கம் அண்மையில் இந்தியாவிடம் கடன் வசதியை பெறும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டது.

இதனையடுத்து இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களை துறைமுகத்தில் இருந்து விடுவிக்க இந்தியா வழங்கியுள்ள இந்த கடனுதவியை பயன்படுத்த அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

எவ்வாறாயினும் இந்தியாவின் இந்த கடன் வசதியை நடைமுறைப்படுத்த மேலும் பல நடவடிக்கைகளை முழுமைப்படுத்த வேண்டியுள்ளதாக அத்தியவசிய பொருட்களை இறக்குமதி செய்யும் வர்த்தகர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

சில இந்திய விநியோகஸ்தர்கள், தமக்கு செலுத்த வேண்டிய பணத்தை அமெரிக்க டொலர்களில் செலுத்துமாறு கோரியிருப்பதால், எதிர்வரும் காலத்தில் இறக்குமதி தொடர்பான சிக்கல்கள் மேலும் அதிகரிக்கும் எனவும் அச்சங்கம் கூறியுள்ளது.