ரஷ்யபடைகளின் கொடூரச்செயல்! கடுமையாக கண்டித்துள்ள மனித உரிமை அமைப்புகள்

0
65

உக்ரைன் மீதான ரஷ்ய போர் கடந்த 28 நாளாக நீடித்து வரும் நிலையில், வான்வெளி, தரைவழி தாக்குதல் மட்டுமின்றி கடல் வழியாகவும் கடுமையான தாக்குதல் நடத்தி வருகின்றது.

இதன்போது ரஷ்ய படைகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் உக்ரைன் வீரர்களும் எதிர்த்து போராடி வருகின்றனர்.

இந்நிலையில் உக்ரைனில் 30 குதிரைகளை ரஷ்ய படையினர் உயிருடன் கொளுத்தியுள்ளனர். உக்ரைனின் ஹாஸ்டமெல் என்ற நகரில் ஒரு குதிரை லாயத்துக்குள் புகுந்த ரஷ்யப் படையினர் பரிதாபமாக தீயில் கருகி இறந்து விட்டன.

மனித உரிமை அமைப்புகள் இந்த சம்பவத்தை கடுமையாக  கண்டித்துள்ளன.

இந்த குதிரை லாயம் அலெக்சான்ட்ரா என்ற பெண்ணுக்குச் சொந்தமானது. இந்த சம்பவம் குறித்து அலெக்சான்ட்ரா கூறுகையில், போர் தொடங்கியதுமே எனது வீடு மற்றும் லாயத்தை ரஷ்யப் படையினர் ஆக்கிரமித்து விட்டனர். என்னை வீட்டை விட்டு போகுமாறும் மிரட்டினர். போகாவிட்டால் சுட்டுக் கொன்று விடுவதாகவும் மிரட்டி வந்தனர். இந்த நிலையில் லாயத்துக்கு தீவைத்து குதிரைகளைக் கொன்றுள்ளனர் என கூறியுள்ளனர்.