மின்வெட்டு தொடர்பாக வெளியான தகவல்!

0
92

நாடு முழுவதும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 5 மணித்தியால மின்வெட்டு மே மாதம் இறுதிவரையில் தொடர்வதற்கான சாத்தியங்கள் உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாட்டில் உள்ள அனல் மின் நிலையங்கள் முழுமையாக எரிபொருளைப் பெற்ற போதிலும், தண்ணீர் பற்றாக்குறை காரணமாக இந்த மின்தடை ஏற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் புத்தாண்டு தினத்தின் போது மின்வெட்டு ஏற்பட வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே மாதம் வரை குறைந்தது இரண்டு மணிநேரம் மின்சாரம் தடைப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.