பெரும்பான்மை பலத்தை இழக்கவுள்ள கோட்டபாய அரசு

0
76

நாடாளுமன்றத்தில் அரசாங்கம் வைத்துள்ள 113 ஆசனங்களின் பெரும்பான்மை விரைவில் பறிக்கப்படும் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுள்ள நெருக்கடிகளை தீர்ப்பதற்கான பாதையில் நாட்டை வழிநடத்துவதற்கு பதிலாக அரசாங்கத்தின் 11 அங்கத்துவ கட்சிகள் புதிய தேசிய வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

புதிய தேசிய வேலைத்திட்டத்தை அரசாங்கத்திடம் முன்வைத்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.