நாளை கோட்டாபயவுடன் பேசப்போவது என்ன? சுமந்திரன் விளக்கம்

0
88

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடையிலான சந்திப்பின் போது, நிலையான ஓர் அரசியல் தீர்வு பெறுவது குறித்தான விடயங்கள் மாத்திரமே அவதானம் செலுத்தப்படும் என்று கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன்  தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் செய்தியாளர்களிடம் விளக்கியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

நீண்ட நாட்களாக ஒத்திவைக்கப்பட்டு வரும் நிலையயில் இக் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. இதன்போது தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்தே அவதானம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

அவ்வாறு, தமிழர்களுக்கான அரசியல் தீர்வு ஒன்று கிடைத்தால் புலம் பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்வார்கள் எனவும் சுமந்திரன் குறிப்பிட்டிருந்தார்.

எவ்வாறாயினும், அதிகாரப்பகிர்வு ஒன்றின் ஊடாக அரசியல் தீர்வுகான பணிகளை அரசாங்கம் முன்னெடுத்தால் மாத்திரமே இது சாத்தியமாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.