நாட்டிற்குள் தற்போது மிகவும் பயங்கரமான நிலைமை ஏற்பட்டுள்ளது – பதவி பறிப்பையடுத்து பல உண்மைகளை வெளியிடும் விமல்!

0
70

நாட்டுக்கு எதிரான அனைத்து உடன்படிக்கைகளையும் கைச்சாத்திட்ட பின்னரே அவை பற்றி அமைச்சரவைக்கு அறிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

மக்கள் எரிவாயு வரிசைகளிலும் எரிபொருள் வரிசைகளிலும் மருந்து வரிசைகளிலும் இருந்த சந்தர்ப்பத்தில் இந்த அனைத்து உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட்டன எனவும் அவர் கூறியுள்ளார்.

மல்வத்து மாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரிடம் அவர் இதனை கூறியுள்ளார். நாட்டிற்குள் தற்போது மிகவும் பயங்கரமான நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமை மோசமாக மாற இடமளிக்க முடியாது.

முடியாதபட்சத்திலேயே நாங்கள் அதனை நாட்டுக்கு கூற ஆரம்பித்தோம். அப்படி செய்யும் போது எங்களை அரசாங்கத்தில் இருந்து வெளியேற்றினர் எனவும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அதேவேளை இங்கு கருத்து வெளியிட்டுள்ள மல்வத்து மாகாநாயக்கர், அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கு இலங்கையின் சில பகுதிகள் மற்றும் துறைகள் உடன்படிக்கைகள் மூலம் வழங்கப்படுவது தொடர்பாக நாட்டு மக்கள் மத்தியில் வாத விவாதங்கள் உருவாகியுள்ளன.

இது சம்பந்தமான எந்த வெளிப்படைதன்மையும் இல்லை என மக்கள் கூறுகின்றனர். உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையில் ஏற்பட்டுள்ள நிலைமையை இலங்கையில் ஏற்படுத்த தயாராகி வருகின்றனர் என கூறியுள்ளார்.

விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, டிரான் அலஸ் உள்ளிட்டோர் இன்று மல்வத்து மாகாநாயக்க தேரரை சந்தித்துள்ளனர்.