சித்திரை புத்தாண்டிற்கு முன்னர் மக்களுக்கு நிவாரணம் !

0
60

நாட்டு மக்களுக்கு சித்திரை புத்தாண்டிற்கு முன்னர் நிவாரணங்கள் பலவற்றை வழங்குவதற்கு நிதியமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) இணக்கம் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (23) இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொண்டபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

அத்துடன், புதிய பாதீடு ஒன்றை முன்வைப்பதற்கும் நிதியமைச்சர் இதன்போது இணக்கம் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கான யோசனைகளை பெற்றுக்கொள்வதற்காக சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் கோரிக்கைக்கு ஏற்ப கோட்டாபய ராஜபக்சவினால் சர்வ கட்சி மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 

இவற்றில் முக்கியமான சில கட்சிகள் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.