கட்டுகஸ்தோட்டையில் தீ அனர்த்தம்! மூவர் பலி நான்கு வீடுகள் சேதம்

0
65

கட்டுகஸ்தோட்டை – மெனிக்கும்புற பிரதேசத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இந்த தீ அனர்த்தம் காரணமாக 4 வீடுகள் வரையில் சேதமடைந்துள்ளதாக தெரியவருகிறது. 

என்ற போதும் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.