ஐக்கிய மக்கள் சக்தி விடுத்துள்ள அபாய அறிவித்தல்!

0
103

இலங்கையில் பேரழிவின் தொடக்க சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அபாய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

இதன்படி இலங்கையிலுள்ள அரச வங்கியொன்று வங்குரோத்து அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் நாடாளுமன்றில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

“அரச வங்கியொன்று இவ்வாறு வங்குரோத்து நிலையில் இருந்தால், அது ஒரு பேரழிவாகவும், ஒரு பேரழிவின் தொடக்கமாகவும் இருக்கலாம்” என அவர் கூறினார்.

நாட்டின் கேள்விகளுக்கு பதிலளிக்க நிதி அமைச்சரோ அல்லது பொறுப்பான எவரும் ஒருபோதும் நாடாளுமன்றத்திற்கு வரமாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.