எந்தவொரு ராஜபக்சவையும் இனி ஆட்சிக்குக் கொண்டு வர ஒத்துழைக்க மாட்டோம்-விமல் வீரவன்ச

0
100

எந்தவொரு ராஜபக்சவையும் இனி ஆட்சிக்குக் கொண்டு வர ஒத்துழைத்து நாம் முயற்சி செய்ய எமக்கு எந்தவொரு எண்ணமும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

அவரிடம் வினவப்பட்ட கேள்வி மற்றும் பதில் வருமாறு,

கேள்வி – நேற்றைய சர்வ கட்சி மாநாட்டில் நீங்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை , இருந்தாலும் நேற்றைய மாநாட்டில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தான் தனித்துவமாக விளங்கினார்! இந்த அரசாங்கம் தற்போது முகம் கொடுத்துள்ள பிரச்சினைகளிலிருந்து தப்பிப்பதற்காக ரணிலைப் பயன்படுத்தும் ஒரு செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதா?

பதில் – ரணில் விக்கிரமசிங்கவை பயன்படுத்துகிறார்களா இல்லையா அல்லது அவர் தாமாக விருப்பத்தில் பயன்படுகின்றாரா என்பது இங்கு முக்கியமில்லை! எவ்வாறாயினும் நேற்றைய சர்வ கட்சி மாநாட்டிலும் நிதி அமைச்சரின் நடத்தையில் அவருடைய சுயநலத்தைக் காண்பித்துக்கொண்டார் , முன்னாள் பிரதமர் என்ற வகையில் அவருக்கான மரியாதையைக் கொடுக்காமல் இவர் நடந்துகொண்டார்.