இலங்கையில் அதிகரிக்கப்பட்டது வற் வரி!

0
63

பெறுமதி சேர் வரிச் சட்டத்தில் (VAT) திருத்தங்களை செய்ய அரச நிதி தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதனடிப்படையில், சேவை மற்றும் விநியோகத்திற்கான பெறுமதி சேர் வரி 15 வீதத்தில் இருந்து 18 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தொற்று நோய் நிலைமை, பொதுவான அவசரகால நேரங்களில் மருத்துவ உபகரணங்கள், மருந்து போன்றவற்றுக்கான பெறுமதி சேர் வரியை நீக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரச நிதி தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழு அதன் தலைவர் அனுரபிரியதர்ஷன யாப்பா தலைமையில் கூடிய போது இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.