இராணுவ புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட வெடிமருந்து தயாரிக்கும் கடத்தல்காரர்!

0
105
இராணுவ புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட வெடிமருந்து தயாரிக்கும் கடத்தல்காரர்!

சக்திவாய்ந்த வெடிமருந்து தயாரிக்கும் கடத்தல்காரர் ஒருவரை இராணுவ புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கிளிநொச்சி – பரந்தனைச் சேர்ந்த சிவலிங்கம் யுவராஜ் (வயது 25) என்பவர் கடந்த 05.12.2021 அன்று கிரைண்டர் மூலம் வெடிமருந்துகளை வெட்டிக் கொண்டிருந்த போது மோட்டார் குண்டு வெடித்ததில் அவரது இளைய சகோதரர் சிவலிங்கம் திலகரிஷன் படுகாயமடைந்தார்.

இத்தாவில் பகுதியைச் சேர்ந்த ஒருவரின் அறிவுறுத்தலின் பேரில், பாதிக்கப்பட்ட நபர், வெடிமருந்துகளை வெட்டி விற்பனை செய்துள்ளார். யுவராஜ் இறந்ததையடுத்து, ரமேஷ் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் 23.03.2022 அன்று இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம், பளை பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு இரகசியமாகச் சென்ற வேளையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.