இரத்துச் செய்யப்பட்டுள்ள தொடருந்து ஆசன முற்பதிவுக் கட்டண அதிகரிப்பு !

0
93

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தொடருந்து ஆசன முற்பதிவுக் கட்டண அதிகரிப்பு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம (Dilum Amunugama) தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் சில நகரங்களுக்கிடையிலான தொடருந்து சேவைகளின் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படக் கூடும் ஆயினும், கட்டணத் திருத்தம் தொடர்பில் இணக்கப்பாடு இன்னும் எட்டப்படவில்லை.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

முற்பதிவு கட்டண அதிகரிப்பு தொடர்பில் தொடருந்து பொது முகாமையாளர் மற்றும் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.

கட்டண அதிகரிப்பிற்கு இதுவரை இணக்கம் தெரிவிக்காத நிலையில் குறித்த கடிதம் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.

ஆயினும், இன்று இரவு புதிய கட்டணங்கள் தொடர்பில் இடம்பெறவுள்ள கலந்துரையாடலை அடுத்து எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் நகரங்களுக்கிடையிலான தொடருந்து சேவைகளில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.