அஸ்கிரி – மல்வத்து பீடாதிபதிகளை சந்திக்க உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

0
67

விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார மற்றும் உதய கம்மன்பில உள்ளிட்ட ஆளும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகள் கண்டி அஸ்கிரி மற்றும் மல்வத்து பீடாதிபதிகளை சந்திக்க உள்ளனர்.

இன்றைய தினம் முற்கல் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான அதுரலிய ரதன தேரர், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வீரசுமன வீரசிங்க, டிரான் அலஸ், கெவிந்து குமாரதுங்க மற்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார உள்ளிட்டவர்கள் இவ்வாறு அஸ்கிரி – மல்வத்து பீடாதிபதிகளை சந்திக்க உள்ளனர்.

ஆளும் கூட்டணியின் பங்காளிக் கட்சிகள் நாடு சரியான பாதையில் என்ற கொள்கைத் திட்டமொன்றை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்கத்கது.

இந்த கொள்கைத் திட்டம் அஸ்கிரி மற்றும் மல்வத்து பீடாதிபதிகளிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.