முத்தக்காட்சிகளுடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் – வெளியான புகைப்படத்தால் கடுப்பான நடிகர் தனுஷ்..!

0
116

ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு அவரது மகன்கள் முத்தம் கொடுக்கும் புகைப்படங்களை ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதிக்கு லிங்கா,யாத்ரா என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் தனுஷை பிரிவதாக ஐஸ்வர்யா அறிவித்தாலும்,

தனது இரு மகன்கள் மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ளார் என்பது அவரது சமூக வலைத்தள பதிவுகளில் இருந்து தெரிய வருகிறது.

இந்த நிலையில் நேற்று உலக கவிதை நாள் கொண்டாடப்பட்ட நிலையில் இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகன்கள் குறித்த அழகிய கவிதையை பதிவு செய்துள்ளார்.

மேலும் அவர் தனது இரண்டு மகன்களும் தனக்கு அன்பான முத்தம் கொடுக்கும் புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார்.

அவர் பதிவு செய்துள்ள கவிதையில் கூறப்பட்டுள்ளதாவது:

என் வயிற்றில் இருக்கும் போது என்னை உதைத்தாய்…

இப்போது நீங்கள் இருவரும் வளர்ந்து என்னை முத்தமிடுவதை நான் ரசிக்கிறேன்

அன்பான ஆத்மாக்களை மகன்களாக பெற்றதற்கு கடவுளுக்கு நான் தினமும் நன்றி சொல்கிறேன்

உங்களுக்கு திருப்பி செலுத்த என்னிடம் இருப்பது பிரார்த்தனை மட்டுமே

உங்கள் ஒவ்வொரு வளர்ச்சியையும் பொக்கிஷமாக பார்ப்பேன்…