நாடாளுமன்ற ஊழியர்களை ஏற்றிச்செல்லும் பேருந்துகளில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

0
63

நாடாளுமன்ற ஊழியர்களை ஏற்றிச்செல்லும் பேருந்துகளில் “நாடாளுமன்ற ஊழியர்கள்” என்ற முத்திரையை நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அழிவில் இருந்து நாட்டை பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில்  அரசாங்கத்திற்கு எதிராக பாரிய போராட்டம் ஒன்று ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது அரசாங்கத்தின் மீது அதிருப்தியடைந்த மக்கள் ஜனாதிபதி செயலகத்தினையும் முற்றுகையிட்டு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில், தற்போது பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கும் மக்கள் கோபமடைந்து நாடாளுமன்ற பேருந்துகளை தாக்கக்கூடும் என்ற சந்தேகத்திலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளை பயன்படுத்தி நாடாளுமன்ற ஊழியர்களை ஏற்றிச்செல்வதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், குறித்த பேருந்து புதிய இடங்களில் இருந்து பயணத்தை தொடங்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.