சமையல் எரிவாயு கிடைக்காமையினால் நபரொருவர் செய்த செயல்

0
64

நாட்டில் எரிவாயு சிலிண்டருக்கு பெரும் தட்டுப்பாடு நிலவும் நிலையில், எரிவாயு சிலிண்டர் கொள்வனவுக்காக மக்கள் நீண்ட வரிசைகளில் நிற்கின்றனர்.

மேலும் சமையல் எரிவாயு கொள்கலனுக்காக காத்திருந்த சிலர் சமையல் எரிவாயு கிடைக்காமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பி வரும் சம்பவங்களும் தினமும் பதிவாயி வண்ணம் உள்ளது.

இந்நிலையில், பியகம பகுதியில் சமையல் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்காக பலமணி நேரம் வரிசையில் காத்திருந்த ஒருவர், சமையல் எரிவாயு கிடைக்காமையினால் விரக்தியடைந்த நிலையில், வெற்று எரிவாயு கொள்கலனை வேறு ஒருவருக்கு விற்பனை செய்துள்ளார்.

அவர் குறித்த கொள்கலனை 5,000 ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.